Monday, January 17, 2011

பாஸ் யாரு?

கடவுள் மனிதனை படைத்த போது மனித உறுப்புகளிடையே 'யார் பாஸ்' என்று பெரிய வாக்குவாதம் ஏற்பட்டது.

மூளை, 'எல்லா உறுப்புகளையும் நான் தான் நிர்வகிக்கிறேன், எனவே நான் தான் பாஸ்' என்று சொல்லியது.

கண், 'மனிதன் என் மூலமாக தான் மற்ற உடல் உறுப்புகளையே பாக்குறான், அதனால் நான் தான் பாஸ்' என்றது.

கை,'என் மூலமாக தான் மற்ற உடல் உறுப்புகளை தொடுகிறான், அதனால் நான் தான் பாஸ்' என்றது.

வயிறு,'என் மூலமாக தான் உணவு ஜீரணம் ஆகி, சத்து மற்ற உறுப்புகளுக்கு போகிறது. அதனால் நான் தான் பாஸ்' என்றது.

கால், 'எல்லா உறுப்புகளையும் சுமந்து கொண்டு மனிதன் என் மூலமாக தான் நடந்து போகிறான், அதனால் நான் தான் பாஸ்' என்றது.

எல்லாத்தியும் கேட்ட ஆசனவாய், 'என் மூலம் தான் கழிவு போகிறது, நான் இல்லாட்டி மனிதன் நாறி போய்டுவான், எனவே நான் தான்
பாஸ்' என்றது.

இதை கேட்டதும் மற்ற உறுப்புகள் சிரித்தன.

'பெரியவங்க பேசிட்டு இருக்கும்போது உனக்கு என்ன வேலை, நீ ஓரமா உள்ள இருக்கே, அதனால நீ போட்டிக்கே லாயக்கு இல்ல' என்று சொல்லி மற்ற உறுப்புகள் ஆசன வாயை எள்ளி நகையாடினாங்க..

அதுக்கப்புறம் கொஞ்ச நாள்ல மனிதனுக்கு மூளை காய்ச்சல் வந்துச்சி,
வயிற்று
வலி வந்துச்சி, கண் வலி வந்துச்சி, கை விளங்காம போச்சி, முட்டி வலி வந்து கால் நடக்க முடியாம போச்சி..ஆனா ஆசனவாய்க்கு மட்டும் எதுவுமே ஆகலை.

அப்புறம் எல்லா உறுப்புகளும் உக்காந்து கூடி பேசினாங்க.

'ஆசன வாய்.. இனிமே நீ தான் எங்க பாஸ்' என்று மற்ற உறுப்புகள் ஆசன வாயை பாஸாக தேர்ந்தெடுத்தார்கள்.

இதுல இருந்து
ன்னா தெரியுது?

பாஸ் ஆகணும்னா மூளை இருக்கணும்னு அவசியம் இல்லை..
..ஆசனவாய் இருந்தாலே போதும்...

1 comment:

  1. காமடி மட்டுமில்லை - யோசிச்சி பார்த்தால் சரியான வலுவான கருத்து இருக்கு அப்பு

    ReplyDelete