Monday, January 17, 2011

நீ தானா அவன்?

'சீக்கிரம், என் வீட்டுக்காரர் வந்துட்டார்' என்று அந்த பெண் சொன்னதும் அதுவரை அவளை ஒத்து கொண்டிருந்தவன் தன் உடைகளை தூக்கி கொண்டு நிர்வாணமாக ஓடி போய் பீரோவுக்கு பின்னால் இருட்டில் மறைந்தான்.

அப்போது, 'இங்க ஒரே இருட்டா இருக்கு இல்லை..' என்று குரல் கேட்டதும் ஆடி போனான்.

'யாரது?' என்று குரல் கொடுத்தான்.

'நான் யாரா இருந்துட்டு போறேன், இங்க நடந்தத நான் வெளிய போய் சொல்லாம இருக்கனும்ன ஆயரம் ரூபாய் கொடுங்க' என்று குரல் கேட்டது.

மானம் போக கூடாது என்பதற்காக கையில் இருந்த பேண்ட் பாக்கட்டில் இருந்து ஆயிரம் ரூபாயை எடுத்து நீட்டியதும் பீரோவுக்கு பின்னால் இருந்த ஜன்னலை திறந்து அந்த உருவம் ஓடி போனது.

அடுத்த நாள் ஜேம்ஸ் வீட்டுக்கு வந்தபோது அவள் அம்மா, 'டேய் நில்லுடா' என்றாள்.

அம்மா எதற்கு நிக்க சொல்கிறாள் என்று புரியாமல் அம்மாவை பார்த்த ஜேம்ஸிடம், 'ஏதுடா இந்த ஆயிரம் ரூபாய்' என்று பணத்தை நீட்டி கேட்டாள்.

அம்மாவிடம் என்ன சொல்லி சமாளிப்பது என்று புரியாமல் ஜேம்ஸ் தடுமாறினான்.

'நீ என்னமோ திருட்டுத்தனம் பண்ணி தான் இந்த காசு கிடைச்சி இருக்குன்னு புரியுது..போனது போவட்டும் பண்ண பாவத்துக்கு சர்ச்சுல போய் மன்னிப்பு கேட்டுட்டு வாடா' என்றாள்.

அம்மா தொல்லை தாங்காமல் ஜேம்ஸ் சர்ச்சுக்கு போய் பாவமன்னிப்பு கூண்டில் ஏறி, 'ஆயிரம் ரூபாயை பாவம் செய்து சம்பாரித்தேன், அதை மன்னிக்க வேண்டும்' என்றான்.

பக்கத்தில் அமர்ந்து இருந்த
பாதர், 'எப்படி சம்பாரித்தாய் என்பதை சொல் மகனே' என்றார்.

ஜேம்ஸ், 'இங்க ஒரே இருட்டா இருக்கு இல்லை
..' என்றான்.

உடனே
பாதர், 'போதும் மகனே புரிந்துவிட்டது..நீ தானா அவன்..?' என்றார்.

No comments:

Post a Comment