Wednesday, January 12, 2011

டிடெக்டிவ் இன்டர்வியு

ஒரு தனியார் துப்பறியும் நிறுவனம் உதவியாளர் வேலைக்கு இன்டர்வியு நடத்தியது. மூன்று பேர் கலந்து கொண்டார்கள். இன்டர்வியு நடத்தியவர்கள் வந்தவர்களிடம் ஒரு மனிதனின் பக்கவாட்டு முகம் கொண்ட போட்டோவை காட்டி அதை பற்றி கருத்துக்களை கேட்டனர்..

முதல் ஆள்:- சார்..இந்த
ஆளு மூக்கு கண்ணாடி போட்டிருக்க முடியாது..

இன்டர்வியுவர்:- எப்படி சொல்றிங்க..


முதல் ஆள்:- இவனுக்கு ஒரு காது தானே இருக்கு சார்..எப்படி கண்ணாடி போட முடியும்?


இன்டர்வியுவர்:- அறிவு கொழுந்து...போய்யா வெளிய...

.........

இரண்டாவது ஆள்:- சார்..இந்த ஆளு மூக்கு கண்ணாடி போட்டிருக்க மாட்டான் சார்..


இன்டர்வியுவர்:- என்னய்யா நீயும் அதையே சொல்லுற..என்ன காரணம்?


இரண்டாவது ஆள்:- இவனுக்கு ஒரு கண்ணு தானே இருக்கு சார்..


இன்டர்வியுவர்:- ம்....ஒரு கண்ணா...நல்ல யோசிக்கிற...ஓடி போய்டு...

.............

மூன்றாவது ஆள்:- சார்..இந்த ஆள் காண்டக்ட் லென்ஸ் போட்டு இருக்கான் சார்..


இன்டர்வியுவர்:- சூப்பர்.. நீ ஒருத்தன் தான்யா வித்யாசமா சிந்திச்சி இருக்க..


மூன்றாவது ஆள்:- நன்றி சார்..வேலை எனக்கு தானே சார்..


இன்டர்வியுவர்:- கண்டிப்பா உங்களுக்கு தான்..அது சரி..நீங்க மட்டும் எப்படி வித்யாசமா காண்டக்ட் லென்ஸ் போட்டு இருக்கானு சொன்னிங்க..


மூன்றாவது ஆள்:- ரொம்ப ஈசி சார்..இவனுக்கு ஒரு கண்ணு, ஒரு காது தான் இருக்கு, கண்டிப்பா மூக்கு கண்ணாடி போட்டிருக்க முடியாது...அதான் காண்டக்ட் லென்ஸ் போட்டிருப்பான்னு சொன்னேன்..


இன்டர்வியுவர்:-??????????

No comments:

Post a Comment