Wednesday, December 22, 2010

வடையும் விதியும்

ஒருத்தன் அவன் ஆபிஸ் 12வது மாடில நின்னுகிட்டு வடை சாப்பிட்டுகிட்டு இருந்தான்.

அப்போ அவனை நோக்கி வேகமா வந்த ஒருத்தன், 'பீட்டர், உன் பொண்ணு மேரி கார் ஓட்டிக்கிட்டு போகும்போது லாரி மோதி செத்து போய்ட்டா' என்று கத்தினான்.

விஷயத்தை கேள்வி பட்டதும் என்ன செய்றதுன்னு புரியாம 12வது மாடியில இருந்து கீழ குதிச்சிட்டான்.

பத்தாவது மாடி வரும்போது தான் அவனுக்கு யோசனையே வந்துச்சி 'நம்மகிட்ட கார் எதுவுமே இல்லையே...'

எட்டாவது மாடிய தாண்டும்போது தான் தோணுச்சி, 'அடடா நமக்கு மகளே கிடையாதே...' .

ஆறாவது மாடி கடக்கும்போது தான் ஞாபகம் வந்துச்சி 'நமக்கு இன்னும் கல்யாணமே ஆகலியே...'.

மூணாவது மாடிய நெருங்கியபோது தான் தெளிவா புரிஞ்சுது, 'ஐயோ என் பேரு பீட்டரே இல்லையே...'.

விதி கடைசியில விளையாடிடுச்சி.

(கடைசியிலே 'ஆஹா...வடை போச்சே...')

No comments:

Post a Comment