Sunday, December 26, 2010

சட்டம் என் கையில்..

கல்லூரி படிக்கும் மாணவன் செமஸ்டரில் பெயில் ஆகிவிட்டான்.அவனுடைய பேராசிரியர் வகுப்பில் அவனை நிக்க வைத்து திட்டி தீர்த்து கொண்டிருந்தார்.

மாணவன்:- (பொறுமையிழந்து...) சார், போதும் நிறுத்துங்க...நான் உங்கள சில கேள்வி கேட்கிறேன், அதுக்கு முதல பதில் சொல்லிட்டு அப்புறம் என்னை திட்டுங்க...பதில் தெரியலைனா உங்க தோல்விய ஒத்துகிட்டு என்னை புத்திசாலின்னு ஒதுக்கணும்..சரியா..

பேராசிரியர்:- என்னையே கேள்வி கேட்கபோறியா...சரி கேளு..

மாணவன்:- 1. சட்டத்துக்கு உட்பட்டது ஆனால் ஏத்துக்கமுடியாதது எது?
2. சட்டத்துக்கு புறம்பானது ஆனால் ஏத்துக்ககூடியது எது?
3. சட்டத்துக்கும் புறம்பானது ஆனால் ஏத்துக்கமுடியாததும் எது?


பேராசிரியர்:- (ரொம்ப நேரம் யோசித்து...) தெரியலைப்பா..நான் என் தோல்விய ஒத்துகிறேன்...இனிமே உன்னை திட்ட மாட்டேன்...நீ தான் உலகமகா புத்திசாலின்னு ஒத்துக்கிறேன்..பதிலை சொல்லு...

மாணவன்:- உங்களுக்கு வயசு 60, உங்க மனைவிக்கு வயசு 20 இது ரெண்டுமே சட்டத்துக்கு உட்பட்டது ஆனா ஏத்துக்கமுடியுமா... முடியாது சார்... ஆனா உங்க மனைவிக்கு 19 வயசுல ஒரு கள்ளகாதலன் இருக்கிறான், அது சட்டத்துக்கு புறம்பானது.. ஆனா ஏத்துக்ககூடியது சார்...அதே சமயம் அந்த கள்ளக்காதலனை நீங்களே உலமகா புத்திசாலின்னு
சொன்னது
சட்டத்துக்கும் புறம்பானது...ஏத்துக்ககூடியதும் இல்லை சார்...

பேராசிரியர்:-????????????!!!!!!!!!!

No comments:

Post a Comment