Friday, March 18, 2011

பத்து பசங்க ஒரே பெயர்..

மனோ தன்னோட கிளாஸ் மேட்ட 20 வருஷம் கழிச்சி எதேச்சையா மார்கெட்டுல பார்த்தான். ரெண்டு பேரும் ஒரு ஹோட்டலுக்கு போய் காபி சாப்பிட்டுகிட்டே பேச ஆரம்பிச்சாங்க.

மனோ:- ஆள் ரொம்ப
டல்
ஆயிட்டியே..எத்தனை குழந்தைங்க உனக்கு?

அவள்:- பத்து ஆம்பிளை பசங்க..

மனோ:- பத்து பசங்களா...அவங்களுக்கு என்ன பேரு வச்சிருக்க..?

அவள்:- சங்கர், சங்கர், சங்கர், சங்கர், சங்கர், சங்கர், சங்கர், சங்கர், சங்கர், சங்கர்...


மனோ:- ஒ..எல்லாருக்கும் ஒரே பேரு தானா.. பசங்க வெளியே விளையாடிட்டு இருக்கும்போது வீட்டுக்குள்ள கூப்பிடணும்னா எப்படி கூப்பிடுவ?

அவள்:- அது ரொம்ப சிம்பிள்..'சங்கர், வீட்டுக்குள்ள வாங்க' ன்னு சொன்னா போதும், எல்லாரும் ஒண்ணா வந்துடுவாங்க..

மனோ:- சாப்பிட கூப்பிடனும்ன்னா எப்படி கூப்பிடுவ?


அவள்:- ரொம்ப சிம்பிள்..அதே மாதிரி 'சங்கர்..சாப்பிட வாங்க'ன்னு சொன்னா எல்லாரும் ஒண்ணா சாப்பிட வந்துடுவாங்க..தனி தனியா கூப்பிட கஷ்டமா இருக்கும்னு தான் பத்து பசங்களுக்கும் ஒரே பேரு வச்சிருக்கேன்..

மனோ:- ஒ..நல்ல ஐடியா தான்.. சரி..ஒருத்தனை மட்டும் தனியா கூப்பிட்டு ஏதாவது ஒரு வேலை சொல்லி செய்ய சொல்லுறதுன்னா எப்படி கூப்பிடுவ?

அவள்:- ஆங்...அது தான் ரொம்ப கஷ்டம்..அப்போ வேற வழியே இல்ல..தனியா தனியா கூப்பிடணும்னா
இனிஷியலை வச்சி தான் கூப்பிடனும்...

மனோ:- ???????????????????????

No comments:

Post a Comment