Friday, April 22, 2011

வயசானாலே பிரச்சனை..

ஒரு பார்க் ஒன்றில் வாக்கிங் வந்த வயசான மூன்று கிழடுகள் தங்கள் வயோதிகத்தின் அவஸ்த்தைகளை பற்றி பேசி கொண்டிருந்தனர்.

எழுபது வயசான பெருசு, "நான் தினமும் காலையிலே எழு மணிக்கு எழுந்துடறேன்.. ஆனா அதுக்கப்புறம் ஒண்ணுக்கு இருக்க மட்டும் இருபது நிமிஷம் ஆயிடறது.. ரொம்ப கஷ்டமாயிருக்கு.." என்று சொன்னார்.


எண்பது வயசான பெருசு, "நீங்க எவ்ளோ பரவாயில்லை.. நான் எட்டு மணிக்கு எழுந்திருப்பேன்.. கக்கூஸ் போய் உக்காந்தா வெறும் காத்து தான் வருது.. முக்கி முக்கி இருந்து முடிக்கிறதுக்கு ஒரு மணி நேரம் ஆயிடுது.. முடியலை...." என்று சொன்னார்.

தொண்ணூறு வயசான கிழடு, "நீங்க எல்லாம் எவ்வளவோ பரவாயில்லை.. நான் ஏழுமணிக்கெல்லாம் குதிரை மூத்திரம் பெய்யுற மாதிரி சுலபமா ஒண்ணுக்கு போய்டறேன்.. எட்டு மணிக்கெல்லாம் மாடு சாணி போடுற மாதிரி சிரமமே இல்லாம வெளிக்கி இருந்துடறேன்.." என்றார்.

மற்ற இருவரும் ஆச்சர்யத்துடன், "ஒ..அப்போ உங்களுக்கு என்ன தான் பிரச்சனை?" என்று கேட்டார்கள்.

அதற்க்கு தொண்ணூறு வயசான கிழடு, "என்ன பிரச்சனை என்றால் நான் ஒன்பது மணிக்கு தான் தூங்கி எழுந்திருக்கிறேன்"
என்றார்.

No comments:

Post a Comment