Thursday, May 12, 2011

காண்டமும் கடவுள் பக்தியும்

ஒரு பையன் காண்டம் வாங்க மெடிக்கல் ஷாப்புக்கு போனான். கடைக்காரர்கிட்ட, 'காண்டம் பாக்கெட் கொடுங்க' என்று கேட்டான்.

கடைகாரர், ' 3 , 5, 12 காண்டம் கொண்ட பாக்கெட்டா தான் இருக்கு, லூசுல இல்லை.. உனக்கு எந்த பாக்கெட் தேவை படும்' என்று கேட்டார்.

அதுக்கு அவன், 'சார், நான் ரொம்ப நாளா ஒரு பொண்ணுக்கு ரூட் விட்டுகிட்டு இருந்தேன். இன்றைக்கு அவளோட வீட்டுக்கு என்னை விருந்துக்கு கூப்பிட்டு இருக்கா. அவங்க அப்பா அம்மாவோட விருந்து சாப்பிட்டு முடிச்சிட்டு நாங்க மாடிக்கு போய்டுவோம். அங்க போனதும் கண்டிப்பா இன்றைக்கு எனக்கு விருந்து வைப்பா என்று நம்பிக்கை இருக்கு. அப்படி ஒரு தடவை செஞ்சிட்டா அவ மயங்கி போய் மறுபடி மறுபடி செய்ய சொல்லி கேட்பான்னு நினைக்கிறேன். எதுக்கும் 12 பேக் காண்டம் கொடுத்திடுங்க' என்று சொன்னான்.

கடைகாரர் கொடுக்க வாங்கி கொண்டு சென்றான்.

அன்றிரவு அவனுடைய காதலியின் வீட்டுக்கு விருந்துக்கு போனான்.

அவள் அப்பா அம்மாவோடு உக்காந்து விருந்து முடிச்சதும் அவள் அப்பா, 'இரவு முழுக்க நாம ஜெபம் பண்ணலாமா' என்று கேட்க்க அவனும் ஒத்து கொண்டு இரவு முழுக்க ஜெபம் செய்தான்.

மறுநாள் காலை கிளம்பும்போது அந்த பெண் அவனருகே வந்து, 'ஆமா.. நீ இப்படி ஒரு கடவுள் பக்தி கொண்டவன்னு என்கிட்டே சொல்லவே இல்லையே' என்று கேட்டாள்.

அதுக்கு அவன், 'நீ கூட தான் உங்க அப்பா மெடிக்கல் ஷாப் வச்சிருக்கார்னு என்கிட்டே சொல்லவே இல்லையே..' என்று சொன்னான்.

No comments:

Post a Comment