Thursday, May 12, 2011

பைத்தியமா இல்லையா?

மன நல மருத்துவர் ஒருவர் தன்னிடம் வந்த தலையில் அடிபட்ட ஒரு பேஷண்ட் முழுவதும் குணம் அடைந்து விட்டதாக சொன்ன போது அந்த பேஷண்ட் வீட்டு ஆட்கள் அதை நம்ப வில்லை.

அந்த பேஷண்ட் நடவடிக்கையை பார்த்தால் இன்னமும் மன நலம் குன்றியது போல் தான் இருப்பதாக சொன்னார்கள். ஆனால் டாக்டர் அதை ஏற்கவில்லை.

எதாச்சும் செஞ்சி அவங்களை நம்ப வைக்க முடிவு செஞ்சார். பேஷண்டையும் அவங்க வீட்டு ஆட்களையும் ஒரு சினிமா பாக்க தியேட்டருக்கு கூட்டிட்டு போனார்.

அப்போ தியேட்டர் சீட்டுக்கள் எல்லாம் புதியதாக பெயின்ட் அடிக்கப்பட்டு ஒரே பெயின்ட் வாசனை வீசியது. அப்போது டாக்டர் பேஷண்ட் வீட்டு ஆட்களிடம் மெல்ல கிசுகிசுத்தார். 'எல்லாரும் பெயின்ட் மேலே உக்காருங்க.. பேஷண்ட் மட்டும் பெயின்ட் மேல உக்காராம இருந்தா அவருக்கு சரி ஆயிடுச்சின்னு ஒத்துக்கறிங்களா?' என்று கேட்டார்.

எல்லாரும் சரி என்று சொல்லிவிட்டு பெயின்ட் மேலே உக்காந்தார்கள்.

பேஷண்ட் சுத்தி முத்தி பார்த்து கீழே கிடந்த ஒரு நியுஸ் பேப்பர் தாளை எடுத்து மடித்து சீட்டின் மேல் போட்டு உக்காந்தான்.

டாக்டர் தன் கட்டை விரலை உயர்த்தி காமிக்க எல்லாரும் பேஷண்ட் குணம் அடைந்து விட்டதாக ஒத்து கொண்டு பேஷண்ட்டை கூட்டி கொண்டு வெளியே வந்தார்கள்.

அப்போது ஒருத்தன் பேஷண்ட்டிடம் , 'எதுக்கு நியுஸ் பேப்பரை மடிச்சி சீட்டு மேல போட்டு உக்காந்த?' என்று கேட்டான்.

அதற்க்கு பேஷண்ட், 'படம் எனக்கு சரியா தெரியலை... முன்ன உக்காந்து இருந்தவன் மறைச்சிட்டு இருந்தான். அதான் உயரமா உக்கார பேப்பரை மடிச்சி போட்டேன்' என்று சொன்னதும் எல்லாரும் அதிர்ச்சி அடைந்தார்கள்.

No comments:

Post a Comment