Thursday, May 12, 2011

கை விரலுல நாத்தம்?

ஒருத்தர் ஞாயிற்றுகிழமை அன்னைக்கு வீட்டுல உக்காந்து வேர்கடலையை தின்னுகிட்டு IPL கிரிக்கட் மேட்ச் பாத்துட்டு இருந்தார்.

வேர்கடலையை சும்மா தின்னாம மேல தூக்கி போட்டு வாயில பிடிச்சி தின்னுகிட்டு இருந்தார்.

பக்கத்துல உக்காந்து டி.வி. பாத்துட்டு இருந்த அவர் பொண்டாட்டி, 'என்னாங்க..' என்று கூப்பிட சட்டென்று திரும்பினார்.

அப்போது மேல தூக்கி போட்ட வேர்கடலை அவர் காதுக்குள வந்து விழுந்துட்டுது.

'ஐயோ..அம்மா..' என்று கத்தி கூப்பாடு போட்டு வீட்டையே ரணகளம் பண்ணிட்டார். குச்சி எடுத்து காதுக்குள விட்டு நோண்டி பார்த்த போது வேர்கடலை வெளியே வரதுக்கு பதிலா இன்னும் கொஞ்சம் உள்ள போய்டுச்சி.

பயந்து போன பொண்டாட்டி ஆஸ்பித்திரிக்கு கூட்டிட்டு போய்டலாம்னு முடிவு செஞ்சப்போ மாடியில இருந்து ஒன்பதாம் வகுப்பு படிக்கிற அவங்க பொண்ணு அவளோட கிளாஸ் பையனை கூட்டிகிட்டு கீழே இறங்கி வந்தா.

'என்னமா..அப்பாவுக்கு என்னாச்சி' என்று கேட்டதும் பொண்டாட்டி சொல்லி முடிக்க, கிளாஸ் பையன், 'இருங்க ஆண்ட்டி, நான் ஒரு ஐடியா பண்றேன்' என்று சொன்னான்.

தன் ஒரு கைவிரலை பெண்ணின் அப்பா மூக்கில் வைத்து அழுத்தி, இன்னொரு கையை வாயில் வைத்து பொத்தி கொண்டு, 'நல்ல வேகமா மூச்சை இழுத்து தம் பிடிச்சி ஊதுங்க அங்கிள்' என்று சொன்னான்.

அதே மாதிரி வேகமாக ஊதியதும் காதில் இருந்து வேர்கடலை வெளியே வந்து விழுந்தது.

ரொம்ப தேங்க்ஸ் என்று சொன்னதும் அந்த பையன் பொண்ணை கூட்டிக்கொண்டு வெளியே போய் விட்டான்.

பொண்டாட்டி, 'பாத்தீங்களா.. சின்ன பையன் என்னா திறமையா கடலையை வெளியே எடுத்துட்டான்.. பின்னாடி என்னவா வருவான்னு நீங்க நினைக்கிறீங்க' என்று கேட்டாள்.

அதுக்கு அவர், 'அவன் கை விரலுல அடிச்ச நாத்தத்தையும் உப்பு கரிச்சதையும் வச்சி பாக்கும்போது அவன் தான் நம்மளோட மருமகனா வருவான்னு நினைக்கிறேன் ' என்று சொன்னார்.

No comments:

Post a Comment