Tuesday, June 14, 2011

நான் என்ன நினைக்கிறேன்னா?

புதுசா கல்யாணம் ஆன ஜோடிகளுக்கு மணமகன் வீட்டுல முதலிரவு நடந்துச்சி. முதலிரவு முடிஞ்சி மறுநாள் காலையில மணமகனின் அம்மா எல்லாருக்கும் தடா புடலா விருந்து செஞ்சி வச்சிருந்தா.

எல்லாரையும் சாப்பிட கூப்பிட்ட போது வீட்டுல இருந்த எல்லாரும் சாப்பிட வந்தாங்க. ஆனா புது ஜோடிகள் மட்டும் சாப்பிட வரலை.

மணமகனின் அம்மா, 'ச்சே.. சாப்பிட கூட வராம அப்படி என்ன தான் செய்யறாங்களோ' என்று சொன்னாள்.

அதுக்கு மணமகனின் தம்பி, 'அம்மா நான் என்ன நினைக்கிறேன்னா..' என்று எதையோ சொல்ல வந்தப்போ அம்மா தடுத்தாள்.

'போதும் நீ எதுவும் நினைக்க வேண்டாம், மூடிகிட்டு சாப்பிடு' என்றாள்.

மத்தியானமும் கறி, மீன் என்று டைனிங் டேபிள் முழுக்க பதார்த்தங்கள் அடுக்கி வைக்கபட்டிருக்க புது ஜோடி அப்போதும் சாப்பிட வரவில்லை.

மணமகனின் அம்மா,'வெளியே வர்ற மாதிரி ஐடியாவே இல்லை போலிருக்கே..' என்று சொல்லி கொண்டே மற்றவர்களுக்கு பரிமாறினாள்.

அப்போது மணமகனின் தம்பி, 'அம்மா நான் என்ன நினைக்கிறேன்னா..' என்று சொல்ல வந்தப்போ அம்மா தடுத்தாள்.

'டேய்.. நீ சின்ன பையன், எதையும் நினைக்காம ஒழுங்கா சாப்பிடு' என்று சொன்னாள்.

இரவும் பரோட்டா, சோலா பூரி என்று வித விதமான ஐட்டங்கள் காத்திருக்க அப்போதும் புது ஜோடி சாப்பிட வரவில்லை.

மணமகனின் அம்மா, 'ஐயையே.. இதென்ன அக்குறும்பா இருக்கே.. 24 மணி நேரமும் சாப்டாம கூடவா அப்படியே செஞ்சிட்டு இருப்பாங்க.. சாப்பிட்டு போய் ஆரம்பிக்கலாம்ல' என்று பொருமினாள்.

அப்போது மணமகனின் தம்பி, 'அம்மா நான் என்ன நினைக்கிறேன்னா..' என்று சொல்ல வந்தப்போ அம்மா கோபமாக, 'அப்படி நீ என்னதான்டா நினைக்கிற, சொல்லி தொலை' என்றாள்.

அதுக்கு அவன், 'இல்லைம்மா அண்ணா நேத்து நைட் இருட்டுல என் ரூமுக்கு வந்து Vaseline எங்கேடா இருக்கு என்று கேட்டான். டேபிள் மேல இருக்கு என்று சொன்னேன். காலையில எழுந்து பார்த்தா டேபிள் மேல Vaseline டப்பா அப்படியே இருக்கும்மா' என்றான்.

அம்மா, 'அப்போ அவன் என்ன டப்பா கொண்டு போனான்?' என்று கேட்டாள்.

அதுக்கு அவன், 'அதே மாதிரி இருந்த fevicol பாட்டில் கொண்டு போயிட்டான்னு நினைகிறேன்மா' என்று சொன்னான்.

No comments:

Post a Comment